சனி, 15 பிப்ரவரி, 2014

அமுரிகற்பம்

அமுரி = மூத்திரம்.
ஆனால் இங்கு மட்டும் மனிதன்,அல்லது விலங்கினங்களின் மூத்திரத்தை குறிக்காது.

அமுரி முறிக்காதவன் வாதியல்ல என்று பழமொழி உண்டு.

வெடியுப்பு திராவகத்தின் பெயர்கள் 

  1. ஊசி நீர்,
  2. 2.வாயு நீர்,
  3. 3.புகைநீர்,
  4. 4.வாய்நீர்,
  5. 5.கடைநீர்,
  6. 6.தீநீர்,
  7. 7.கற்றாழை நீர்,
  8. 8.நாதாந்த நீர், 
  9. 9.பழச்சாறு,
  10. 10.வர்ணதாதி நீர்.

குமரிக் கற்பம்.




மேற்படி 7 முறை கழுவிய சோற்றை திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி,)சுரணமிட்டு பிசறி சிறிது பசு நெய் விட்டு பிசறி நாட்டு சர்க்கரை சிறிது சேர்த்து காலை வெறும் வயிற்றில் விழுங்கவும்.இப்படி காலை,மாலை,48 நாட்கள் சப்பிட்டுவரவும்.ஒருமண்டலம் சாபிட்டால் மூலம்,பௌத்திரம்,18 வகை குஷ்டநோய்கள் பனிபோல் விலகும்.


இப்படி ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம்,திடமும் உண்டாகி ஞானியாவான்.


12 வருடம் சாப்பிட்டால் சித்தனுக்கு சித்தனாகி,உமிழ்நீரில் சூதத்தை கட்டுவான். 



குறிப்பு 


மருந்தை வெயில் காலத்தில் சாப்பிட ஆரம்பிக்கவும்.உடல் அதிகம் குளிர்ச்சி உற்றால் திரிகடுகை அதிகம் சேர்த்து சாப்பிடவும்.இல்லறத்தை துறந்தவர்களுக்கு இது நன்மை பயக்கும்.

எட்டி மரக்கற்பம்




இந்த கொட்டையை பொடிபொடியாக நறுக்கிப் பாலில் ஊறப்போட்டு எடுத்து காயவைத்து முதல் நாள் ஒரு கடுகு வீதமும் 2 ஆம் நாள் இரு  கடுகு வீதமும் இப்படி ஒவ்வொரு கடுகு எடையாக கூட்டி 20 ஆம் நாள் 20 கடுகு எடை சாப்பிட வேண்டும்.தேக சித்தியாகும்.யானை பலம் உண்டாகும்.


குறிப்பு.

இது அதிக கசப்பு சுவை உடையது.உடல் உஷ்ணம்,ரத்த அழுத்தம்,ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே குறைக்க கூடியது.எனவே கவனமுடன் சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும்.
காட்டில் வசிப்பவர்களுக்கு விஷகடி ஏற்படாமல் இருக்க இம்மருந்து சாப்பிடவும்.உடலில் அரிப்பு,சொறி,உண்டானால் உடனே மருந்தை நிறுத்தவும்.கசப்பு உடலில் தன்னிறைவு அடைந்து விட்டது என்று பொருள் கொண்டு  மருந்தை நிறுத்தி கொள்ளவும்.